நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 6வது வாரம் வியாழக்கிழமை
2024-03-28



ஆண்டவரே இயேசுவே,
எனக்காக உடைக்கப்பட்டவரே! உம்மைத் துதிக்கின்றேன். எனக்காக அவமானங்களை ஏற்றவரே! உம்மை ஆராதிக்கின்றேன். எனக்காக உம்மைத் தந்தீரே! நன்றி கூறுகின்றேன். “நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்” என்று, இன்றைய இறைவார்த்தையில் உமது திருவிருந்தை சுவைத்து உம்மில் வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகின்றேன். நானும் ஒவ்வொரு திருப்பலி வாயிலாகவும் இறைவனுடன் ஒன்றித்து இறைவனுக்கு ஏற்ற பலியாக வாழும் ஆற்றலையும் ஞானத்தையும் தாரும். விண்ணில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவே! என் ஆன்மாவுக்கு நல்ல விருந்தாய் வாரும். நிலையான வாழ்வை உடைமையாக்கிக் கொள்ள கிருபை கூர்ந்து நடத்தும். ஆண்டவரே இயேசுவே! இன்று உமது சீடர்களின் பாதத்தைக் கழுவியது போல, இந்தப் பாவியாகிய என் பாவங்களை எல்லாம் உமது தூய இரத்தத்தால் கழுவும்; உமக்கு உதவாத அனைத்து தீமையின் காரணங்களையும் என்னை விட்டு அகற்றும். நீர் அன்று இஸ்ரேயலின் வீட்டாரைக் கடந்து, அவர்களை ஆசீரால் நிறைத்து, அவர்களின் தீமைகளை எல்லாம் அவர்களை விட்டு அகற்றியது போல, இன்று என்னையும்; என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் பிரச்சனைகளையும், தீமைகளையும் அகற்றியருள வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

புனித வெள்ளி சிலுவைப் பாதை சிந்தனைகளை வழங்கும் திருத்தந்தை



இவ்வாண்டு, புனித வெள்ளியன்று, உரோமை கொலோசியத்தில் நிகழவிருக்கும் திருச்சிலுவைப் பாதை சிந்தனைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்க முடிவு செய்திருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 26, இச்செவ்வாயன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்தத் தகவலை தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித்... [2024-03-27 23:48:21]



"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு



"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" என்ற திருத்தூது அறிவுரை மடலானது ஒன்றிணைந்துப் பயணிக்க விரும்பும் திருஅவையின் பலன் என்றும், உரையாடல், செவிசாய்த்தல், கடவுளின் திருவுளத்தைத் தெளிந்து தேர்தல் போன்றவற்றைப் பகுத்தறிய உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்"... [2024-03-26 23:23:35]



வடக்கு காசாவை நெருங்கும் பஞ்சத்தினால் பாதிக்கப்படும் சிறார்



வடக்கு காசாவில் பஞ்சம் நெருங்கி வந்துவிட்டது என்றும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தலைமை இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல்.
மார்ச் 25 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு... [2024-03-26 23:21:34]

காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!



இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி... [2024-03-14 22:51:51]



இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்



இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயர் கிளீட்டஸ் சந்திரசிரி பெரெரா அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை நியமித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவரும் 76 வயதான ஆயர் கிளீட்டஸ்... [2024-03-05 22:42:47]

யானைத் தாக்குதல்கள் குறித்து இந்தியத் தலத்திருஅவை கவலை!



இந்தியாவின் கேராளாவில் யானைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் வேளை, சிலர் மனிதர்களை விட காட்டு விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பேராயர் Raphael Thattil அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம். மார்ச் 24, இஞ்ஞாயிறன்று, கேரளாவின் வயநாடு... [2024-03-27 23:46:51]



இந்தியாவில் 11 மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரிதும் துயருறுகிறது!



அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய மாநிலங்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றன என்று தெற்காசிய நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்த அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மார்ச் 21,... [2024-03-24 00:08:30]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

தவக்கால சிந்தனையும் பாடலும்:-33- உயிரளிப்பவர் ஆண்டவர்


2024-03-28

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

The Bible 2013 | Tagalog Dubbed


2024-03-28

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2024-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! செபிப்பதுடன் நீங்கள் விதைத்த விதைகளால் நன்மைகள் நடக்க உங்கள் இதயத்தைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள், இது மகிழ்ச்சியின் கனிகளையும் கடவுளுடன் ஐக்கியத்தையும் உருவாக்குகின்றது. களைகள் பல இதயங்களை ஆட்கொண்டு அவர்களை கனி கொடுக்காமல் தடுத்துவிடுகின்றது, ஆகவே அன்பான பிள்ளைகளே, ஒளியாகிய நீங்கள், அன்புடன் இவ்வுலகில் எனது விரித்த கரங்களுக்குள் வாருங்கள். அதுவே இறைவனிடம் உங்களை அழைத்துச் செல்லும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“




2024-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் செபிக்கும் நேரமாக இருக்கட்டும்"




2023-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தை செபத்துடன் அமைத்து, சமாதானம் மற்றும் நல்ல விடயங்கள் நடைபெற உதவுங்கள், இதன்மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்வு உங்கள் இதயத்தை, குடும்பத்தை மற்றும் உலகை நிரப்பட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."


திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)